மலேசியாவில் ஆற்றில் மூழ்கி இரு சிறுமிகள் பலி!

JERAM PASAR ஆற்றில் 4 தோழிகளுடன் குளித்துக்கொண்டிருந்த 15 வயது 12 வயதுள்ள இரு சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.10 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் மூழ்கிய இரு சிறுமிகளை உயிருடன் மீட்டதாகவும் மேலும் இருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் திரங்கானு மாநில மீட்பு ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

14 மீட்பு அதிகாரிகளுடன் சுமார் 3 மணிநேரத் தேடுதலுக்குப் பின்னர் இரு சிறுமிகளின் உடலும் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 15 வயதுள்ள சிறுமி ஒருவர் 50 மீட்டர் தூரத்தில் 7 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டார் எனவும் 12 வயதுடைய சிறுமி 75 மீட்டர் தூரத்தில் 12 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருடன் மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles