மக்களைப்பற்றி எனக்கு கவலையில்லை! – முன்னாள் பிரதமர் மகாதீர்

வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் எனப் பெயர் பெற்ற மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை என்றும், தான் சரி என்று நினைத்ததையே எப்போதும் செய்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது மரபு என்ன என்று என்னிடம் எப்போதும் கேட்கப்படுகிறது. நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மக்கள் என்னை ஒரு சர்வாதிகாரியாக அடையாளம் காணலாம். அது அவர்களின் உரிமை. நான் சரியானதைச் செய்யும் வரை, மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை என்று தொடக்கத்திலிருந்தே முடிவு செய்துவிட்டேன் என்று ‘மை நேம் இஸ் மகாதீர்” எனும் ஆவணப்படத்திற்காக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

கடந்த வாரம் பெர்லினில் நடைபெற்ற ஒரு ஊடக விழாவில் ஆவணப்படங்களுக்கான பிரிவில் இப்படம் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles