சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு மே தின உயரிய விருது

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்குத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் ‘Medal of Honour ‘ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கத்துக்கும் ஊழியரணி மேம்பாட்டுக்கும் டாக்டர் பாலகிருஷ்ணனின் அயராத உன்னதச் சேவையை அந்த விருது அங்கீகரிக்கிறது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் மே தின விருது நிகழ்ச்சியில் டாக்டர் பாலகிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டார்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைவர் K தனலட்சுமி, தலைமைச் செயலாளர் இங் சீ மெங் இருவரும் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

நிகழ்ச்சியில் 188 அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மீடியாகார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த மூவருக்கும் விருது வழங்கப்பட்டது.

அவர்களில் ஒருவர், தயாரிப்புச் சேவைகள் பிரிவின் துணைத்தலைவர் சோஃபியான் யூசி .

இன்னும் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய குழுவை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்துகிறார்.

ஒளிப்பதிவாளராக வேலை வாழ்க்கையைத் தொடங்கியதால் அந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவதாக அவர் சொன்னார்.

விருது பெற்ற மற்றொருவர், ஒலிப்பதிவாளர் சுமன் வீராசாமி.

இவர் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

ஒலிபரப்பு ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைமைச் செயலாளராகவும் உள்ள அவர் உருமாற்றத்தைச் சமாளிக்க ஊழியர்களுக்கு உதவி வருகிறார்.

இன்னொருவர் சிந்தியா டான் . சுமார் 40 ஆண்டுகளாய் வெவ்வேறு பொறுப்புகளை அவர் ஏற்றிருக்கிறார். தொழில்துறையின் மாற்றத்திற்கு ஏற்ப அவரும் மாறியிருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles