அமைதிப் பேச்சு மோசமான மத்தியஸ்தத்தால் மாத்திரம் தோற்பதில்லை – எரிக் சொல்ஹெய்ம்!

ஓர் அமைதிப் பேச்சு மோசமான மத்தியஸ்தத்தால் மாத்திரம் தோல்வியடைவதில்லை. மாறாக சமாதானத்தைவிட போரில் ஈடுபடுவதே தமக்கு சாதகம் என்று ஒரு தரப்பு இராஜதந்திர ரீதியாக சிந்திக்கும்போதுதான் அது தோல்வியடைகிறது – இப்படி தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முடிவில்லாத போரை விட, குழப்பமில்லாத சமரசம் மேலானதாகும். போர்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகமுக்கியமான பாடம் இதுவாகத்தான் இருக்கும். இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் ஏன் இவ்வளவு மோசமான இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது? நீண்டகாலம் வெற்றிகரமாக நடைபெற்ற சமாதான முயற்சிகள் இறுதியில் ஏன் தோல்வியடைந்தன என்பது குறித்து துடிப்பான இளம் இலங்கையர்களுடன் கலந்துரையாடினேன்.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் தலையீடு செய்வதற்கு நோர்வேக்கு எந்தவொரு வெளிப்படையான காரணமும் இருக்கவில்லை. காலனித்துவ வரலாறு இல்லை. மூலோபாய நலன்கள் இல்லை. செல்வாக்குச் செலுத்துவதற்கான அதிகாரமும் இல்லை. ஆனால், இவ்விவகாரத்தில் ஓர் அமைதியான முடிவை எட்டுவதற்காக நாங்கள் சுமார் 10 ஆண்டுகளாக எமது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டோம்.

ஓர் அமைதிப் பேச்சு மோசமான மத்தியஸ்தத்தால் மாத்திரம் தோல்வியடைவதில்லை. மாறாக சமாதானத்தைவிட போரில் ஈடுபடுவதே தமக்குச் சாதகமாக அமையும் என ஒரு தரப்பு இராஜதந்திர ரீதியாக சிந்திக்கும்போதுதான் அது தோல்வியடைகிறது. மத்தியஸ்தம் வகிப்பவரால் அதனை மீறிச் செயல்படமுடியாது. மாறாக ஒரு தரப்பின் எண்ணம் மாறும்போது, அதனை ஏற்று வழிநடத்துவதற்குரிய செயன்முறையொன்று தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அந்தப் பேச்சு களத்தில் நீண்டகாலம் நிலைத்திருப்பதை மாத்திரமே எம்மால் செய்யமுடியும் – என்றும் அவர் அந்தப் பதிவில் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles