இந்தியாவில் கனமழையால் 89 பேர் பலி! 53 பேர் காயம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழை, சூறைக்காற்றால் 89 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று – மே 13ஆம் திகதி உத்தரப் பிரதேசத்தின் பரேலி, பிரயாக்ராஜ், பதோஹி, மிர்சாபூர், ஃபதேபூர், பிரதாப்கர், தியோரியா, சோன்பத்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்றுடன் கனமழை பெய்தது.

காற்றில் மரங்கள் வீடுகள், வாகனங்களின்மீது சாய்ந்தன. கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இந்தச் சம்பவங்களில் 89 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். 114 கால்நடைகள் பலியாகின. 87 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிப்புகளை அடுத்து நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles