சிங்கப்பூரில் கவனக்குறைவால் நோயாளியின் மரணத்துக்குக் காரணமான மருத்துவருக்கு ஒன்றரை வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சான் பிங்யி என்ற 38 வயது மருத்துவர், லாவ் லி டிங் எனும் 31 வயது தேவையில்லாத சூழலில் EDTA எனும் மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தியுள்ளார்.
கனரக உலோகத்தால் உடலில் நச்சு சேர்வது போன்ற குறிப்பிட்ட சில பிரச்சினைக்கு ஒருவர் ஆளாகும்போதுதான் EDTA மருந்து செலுத்தப்பட வேண்டும். அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி பெற்றோர் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதி உள்ளது. ஆனால், சான் பிங்யி அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
2019 மார்ச் 8ஆம் திகதி நோயாளிக்கு மருந்து ஏற்றப்பட்டது. பின்னர், அவர் 5 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.
இது தொடர்பில் மருத்துவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில், இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
