உத்தர பிரதேசத்​தில் புழுதிப் புய​லால் 117 பேர் உயி​ரிழப்பு!

வடஇந்​திய மாநிலங்​களில் கோடை காலத்​தில் நிலங்​கள் வறண்டு விடு​கின்​றன. இதனால் மண் பொடி​யாக மாறி காற்​றில் கலக்​கிறது. அதிக வெப்​பத்​தால் வலு​வான குறைந்த காற்​றழுத்த மண்​டலம் உரு​வாகிறது. மேலும் பாகிஸ்​தான் மற்​றும் தார் பாலை​வனத்​தில் இருந்து வீசும் வெப்பக் காற்று மணல், தூசியை வாரி இறைக்​கிறது.

இதுபோன்ற காரணங்​களால் வடஇந்​திய மாநிலங்​களில் மே, ஜூன் கோடை காலத்​தில் புழு​திப் புயல்​கள் உரு​வாகின்​றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் வீசக்​கூடும் என்று சில நாட்​களுக்கு முன்பே வானிலை மையம் எச்​சரிக்கை விடுத்​தது. இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி மாலை​யில் உத்தர பிரதேசம் மற்​றும் அண்டை மாநிலங்​களில் புழுதிப் புயல் வீசி​யது. உத்தர பிரதேசத்​தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்​தில் புழுதிப் புயல் வீசி​யது. பல்​வேறு இடங்​களில் இடி, மின்​னலுடன் பலத்த மழை​யும் பெய்​தது. புழுதிப் புய​லால் பிர​யாக்​ராஜ், பதோஹி, மிர்​சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயி​ரிழந்​தனர். 50இற்கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர்.

புழுதிப் புய​லால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு விரைந்து நிவாரண உதவி​களை வழங்க முதல்​வர் யோகி ஆதித்ய நாத் உத்​தர​விட்டு உள்​ளார். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துள்ள அவர், சம்பவ இடங்​களுக்கு அதி​காரி​கள் சென்று ஆய்வு செய்ய வேண்​டும். உயி​ரிழப்​பு, பொருட்​சேதம், பயிர்​கள் சேதம் குறித்து ஆய்வு செய்ய வேண்​டும். பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு காப்​பீட்​டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்ளார்.

புழுதிப் புயல் பாதிப்புகள் குறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது –

புழுதிப் புயல் மற்​றும் இடி, மின்​னலுடன் கூடிய மழை​யால் மாநிலம் முழு​வதும் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. அதிக அளவில் பொருட்​சேத​மும் ஏற்​பட்​டிருக்​கிறது. 2,000-க்​கும் மேற்​பட்ட கிராமங்​கள் புய​லால் உருக்​குலைந்து உள்​ளன. நூற்​றுக்​கணக்​கான மரங்​கள்,மின் கம்​பங்​கள் சரிந்து உள்​ளன. ஏராள​மான வீடு​கள், கடைகள் சேதமடைந்து உள்​ளன. வீடு​கள், கடைகளின் மேற்​கூரைகள் காற்​றில் பறந்துள்​ளன.

பதோஹி பகுதி கங்கை நதி​யில் அமைக்கப்பட்டிருந்த மிதவை மேம்​பாலம் கடுமை​யாக சேதமடைந்​திருக்​கிறது. ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த பயிர்​கள் சேதமடைந்​துள்​ளன. ஆடு, மாடு​கள் உட்பட நூற்​றுக்​கணக்​கான கால்​நடைகள் உயி​ரிழந்​துள்​ளன. மரங்​கள் விழுந்து நூற்​றுக்​கணக்​கான கார்​கள் நாச​மாகி உள்​ளன. பல்​வேறு பகு​தி​களில் போக்​கு​வரத்து ஸ்தம்​பித்து உள்​ளது.

புழுதிப் புய​லால் சுமார் 30 மாவட்​டங்​களில் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன. நூற்​றுக்​கணக்​கான கிராமங்​களில் மின் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டுள்ளது. போர்க்​கால அடிப்​படை​யில் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டுள்ளோம். இவ்​வாறு அவர்கள் கூறினர். உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த தொழிலாளி நான்கி மியான் (50). இவர் 13ஆம் திகதி மாலை அங்குள்ள திருமண மண்டபத்தின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.

திருமண மண்டப மாடியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் இரும்புக் கம்பியை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், காற்றின் வேகத்தால் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அதோடு தொழிலாளி நான்கி மியானும் சுமார் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். தரையில் விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “காற்றின் வேகத்தில் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டேன். சுமார் 50 அடி உயரத்தில் பறந்து தொலைவில் விழுந்தேன். நான் தூக்கி வீசப்பட்டதை யாரோ செல்போனில் படம் பிடித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

தொழிலாளி தூக்கி வீசப்பட்ட வீடியோவை பதிவு செய்த இளைஞர் ராஜன் அன்சாரி கூறும்போது, “எனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தேன். திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது எங்கள் வீட்டின் கான்கிரீட் சுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அப்போது, ஒருவர் சுமார் 50 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதை செல்போனில் வீடியோ எடுத்தேன்’’ என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles