தொடர் மழையால் இயல்புநிலை இழந்தது யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளிலும் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நகரப் பகுதிகள் மற்றும் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக, நெடுந்தீவு, நல்லூர், யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பணி மற்றும் தேவைகளின் நிமித்தம் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன், சில பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வானிலை எதிர்வுகூறல் அறிக்கைகளின்படி கனமழை, காற்று, இடிமின்னலுடனான காலநிலை இன்றுமுழுவதும் தொடரும் என்று கூறப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles