இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டால், உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது என்று இந்திய இராணுவ தளபதி உபேந்திர திவிவேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சித்தூர் நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவிலேயே அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் போன்ற சம்பவம் மீண்டும் ஏற்பட்டால், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜெனரல் உபேந்திர திவிவேதி, ‘‘இந்த கேள்விக்கு நான் ஏற்கெனவே பதில் அளித்ததை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டால், உலக வரைபடத்திலோ அல்லது வரலாற்றிலோ பாகிஸ்தான் இடம் பெற வேண்டுமா? இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.
