எபோலா வைரஸ் தொற்று கண்காணிப்பை தீவிரப்படுத்தும் சிங்கப்பூர்

எபோலா வைரஸ் தொற்று சிங்கப்பூருக்குள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருவதாகச் இன்று செவ்வாய்க்கிழமை தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடான கொங்கோ, உகண்டா ஆகிய நாடுகளில் ‘புந்திபுகியோ’ கிருமியால் பரவிவரும் எபோலா நோயைச் சிங்கப்பூர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அது குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட வட்டாரங்களுக்குப் பயணம் செய்த பயணிகளுக்கு எபோலா நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அவர்கள் நில, கடல், வான்வழிச் சோதனைச்சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

மே 19ஆம் தேதி முதல், சிங்கப்பூருக்குள் நுழையும் அல்லது வெளியேறும் பயணிகளின் நலன் கருதி, எபோலா பரவல் குறித்த சுகாதார அறிவிப்புகள் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காட்சிப்படுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள், தாங்கள் புறப்பட்ட தேதியிலிருந்து 21 நாள்களுக்குத் தங்களது உடல்நிலையைச் சுயமாகக் கண்காணித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவர்; உடல்நலம் குன்றினால் அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என அமைப்பு கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட வட்டாரங்களுக்குச் செல்லத் திட்டமிடும் உள்நாட்டுப் பயணிகள், கிருமித் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அது ஆலோசனை வழங்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles