மட்டக்களப்பு பொது நூலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!

மட்டக்களப்பு பொது நூலக கட்டடத்தை இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா திறந்து வைத்தார்.

இந்த நூலகத்துக்கு கடந்த 2010ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நிதிப் பற்றாக்குறை, நிர்வாக சிக்கல்கள் காரணமாக கட்டுமானப் பணி இழுபறிப்பட்டது. இந்த நிலையில், 34.5 கோடி ரூபாய் செலவில் பொதுநூலகக் கட்டுமானப் பணி நிறைவடைந்தது.

இன்றைய தினம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு நூலகம் இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ​கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன.

நூலக திறப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர, அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறீநேசன், சிறிநாத், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles