இஸ்ரேலின் தாக்குதலில் தெற்கு லெபனானில் 19 பேர் பலி!

தெற்கு லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்தனர் என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெய்ர் கானுன் என்ற நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிறுவர்கள், 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, நபாத்தியே, டயர் நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர் 29 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நீடிக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles