அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம்!

சீனி, பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி குறைவடைந்துள்ளது. நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்றஇறக்கங்கள் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்தவற்கான செலவை நேரடியாகப் பாதிக்குமென அந்த சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இறக்குமதி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வரும் நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் 400 கிராம் பைக்கெற் 50 ரூபாயாலும் ஒரு கிலோ பைக்கெற்றின் விலை 125 ரூபாயாலும் அதிகரித்துள்ளது.

பால்மா விலை உயர்வையடுத்து பால் தேநீரின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles