பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

பிரிட்டனில் முன்னாள் அமைச்சர்களுக்கான வேலைவாய்ப்பு விதிமுறைகளை மீறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் ஏரோஸ்பேஸ்’ (Cambridge Aerospace) இன் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிறுவனம் சமீபத்தில் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரசின் ஏவுகணை ஒப்பந்தத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா | British Ex Defence Minister Grant Shapps Resigns

இந்த ஏவுகணை ஒப்பந்தத்திலோ அல்லது நிறுவனத்தின் ராணுவப் பணிகளிலோ தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார்.

ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய கிராண்ட் ஷாப்ஸ், அதற்கு முன்பாகவும் பல்வேறு அரசு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். அத்துடன் கடந்த பொதுத் தேர்தலில் கிராண்ட் ஷாப்ஸ் தனது தொகுதியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles