சிங்கப்பூரை மீண்டும் மிரட்டும் கோவிட் தொற்று!

சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 700 பேர் கோவிட் – 19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதிலேயே இந்த எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இதற்கு முந்தைய வாரத்தில் 8 ஆயிரம் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர் என்று தொற்றுநோய்கள் தடுப்பு அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் கோவிட்-19 தொற்று பாதிப்புக்காக நாளொன்றுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் சராசரி எண்ணிக்கையும் 56லிருந்து 73ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாளொன்றில் தொற்றுக்குள்ளான ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது என்பி.1.8.1. என்ற கொவிட்-19 திரிபு சிங்கப்பூரில் அதிகம் பரவி வருகிறது. உள்ளூரில் கோவிட்-19 தொற்றியோரில் பாதிக்கு மேற்பட்டோர் இந்தத் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles