தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மேலும் 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்.
ஏறக்குறைய 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதை அந்தக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்தக் கட்சியின் செ. ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றனர்.
இவர்களுடன், ஸ்ரீநாத் – (தூத்துக்குடி தொகுதி), எஸ்.கமலி (அவிநாசி), சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்), ஆர்.வி.ரஞ்சித் குமார் (காஞ்சிபுரம்), வினோத் (கும்பகோணம்), ராஜீவி (திருவாடானை), பி.ராஜ்குமார் (கடலூர்), காந்திராஜ் (அரக்கோணம்), மதன்ராஜ்.பி (ஒட்டப்பிடாரம்), ஜெகதீஸ்வரி.கே (ராஜபாளையம்), ராஜேஷ்குமார்.எஸ் (கிள்ளியூர்), விஜய்பாலாஜி (ஈரோடு கிழக்கு), லோகேஷ் தமிழ்செல்வன்.டி (ராசிபுரம்), விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ (சேலம் தெற்கு), ரமேஷ் (திருவரங்கம்), பி.விஸ்வநாதன் (மேலூர்), குமார்.ஆர் (வேளச்சேரி), தென்னரசு.கே (திருப்பெரும்புதூர்), சம்பத்குமார்.வி (கோவை வடக்கு), முகமது ஃபர்வாஸ்.ஜே (அறந்தாங்கி), சரத்குமார் (தாம்பரம்), மரிய வில்சன் (ராதாகிருஷ்ணன் நகர்), விக்னேஷ்.கே (கிணத்துக்கடவு) ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட்இ இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
எனினும், சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
