12 கனடியர்கள் இஸ்ரேல் படைகளால் கைது!

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முயன்ற 12 கனடிய ஆர்வலர்கள் இஸ்ரேலிய படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதனை இந்த விவகாரத்தை ஒருங்கிணைத்த ‘குளோபல் சுமுத் கனடா’ என்ற ஆர்வலர் அமைப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை அரசாங்க அதிகாரிகள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்காத போதிலும்இ ‘குளோபல் சுமுத் கனடா’ அமைப்பு அவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மைக்கேல் பிரான்ஸ், ஒமர் ஷாபான், சபா செப்பி, செபஸ்டியன் டோ, கோ தின்மாங், உமிர் தியார், ஷாஹித் மஹ்மூத், ஆடம் ஜோசுவா நோராட் பௌசைட், ஒலிவியர் ஹியூரார்ட், இஹாப் லோட்டயேஃப், மேரி கிரேஸ் மதிசென் மற்றும் டேனியலா-மரியா போனமிகோ ஆகிய 12 கனடியர்களே இவ்வாறு இஸ்ரேலிய படைகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியப் படைகளால் தாங்கள் கைது செய்யப்பட்டால் சிறைக்குள்  உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதாக கனடிய ஆர்வலர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles