தென்னிலங்கையில் வெள்ளம்: சிலாபம் மருத்துவமனையும் மூழ்கியது!

வெள்ளப்பெருக்கால் சிலாபம் மருத்துவமனையின் 3 சிகிச்சை விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்னிலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் புத்தளம், சிலாபம், கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

இதேசமயம், களனி கங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் 9 விமானங்கள் கட்டுநாயக்காவில் தரையிறக்க முடியாது திருப்பி அனுப்பப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles