ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அமெரிக்க நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை இந்த தாக்குதல்களை நடத்துவது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
