தெற்கு கலிபோர்னியாவில் இரசாயன தொட்டியொன்று எப்போது வேண்டுமானாலும் செயலிழக்கும் அல்லது வெடிக்கும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசித்து வந்த 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த தொட்டியில் இருந்து புகை வெளியேறியதை தொடர்ந்து தீயைணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடதிற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தற்காலிகமாக நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் அந்த தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது வாயு கசிவோ அல்லது புகை மண்டலமோ இல்லை என்றாலும், தொட்டி “தீவிர நெருக்கடியில்” இருப்பதாகவும், அதை பாதுகாக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
