சீரற்ற வானிலையால் 29 ஆயிரம் பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அண்மைக்கால அறிக்கையின்படி, இந்த அனர்த்தத்தினால் 7 ஆயிரம் 482 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3 ஆயிரத்து 950 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

அத்துடன்இ புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 265 பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 51 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 566 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 204 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 558 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த அனர்த்த நிலைமையினால் 02 வீடுகள் முழுமையாகவும் 836 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles