நாடு திரும்பிய சமீராவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியபோது சிறை பிடிக்கப்பட்ட இலங்யைரான சமீரா மெஹ்பூப்தீன் இன்று -மே 24ஆம் திகதி பாதுகாப்பாக நாடு திரும்பினார்.

சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இஸ்தான்புல்லுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சமீரா மெஹ்பூப்தீன் இன்றைய தினம் நாடு திரும்பினார்.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் காஸா மக்களுக்காகக் குரல் கொடுத்து மீண்டு வந்துள்ள சமீரா மெஹ்பூப்தீனை வரவேற்பதற்காகப் பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

‘பலஸ்தீனத்தை விடுவிப்போம்’ அமைப்பின் பிரதிநிதிகள், சமீரா மெஹ்பூப்தீனின் இந்தத் துணிச்சலான மனிதநேயப் பயணத்தைப் பாராட்டி, அவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியமையைக் கொண்டாடும் வகையில் சமீராவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles