யாழ்ப்பாணத்தில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது. வரணி – இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை நேற்றையதினம் (23) சுவாசிப்பதற்கு சிரமப்பட்டது. இந்நிலையில் குழந்தையை நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
