நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய கனடிய தமிழருக்கு அமெரிக்க நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவை சேர்ந்த 40 வயதான ரமணன் பத்மநாதன் என்பவருக்கே கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இந்தத் தண்டனைத் தீர்ப்பை அறிவித்தது.
தண்டனை பெற்ற குற்றவாளி மிகப்பெரும் இணையவழி பாலியல் மிரட்டல் திட்டத்தின் பின்னணியில் இருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன், அவர், 6 வயது முதலான 145இற்கும் மேற்பட்ட சிறுவர்களை எந்தக் குழந்தையும் அனுபவிக்கக்கூடாத கொடூரங்களுக்கு உட்படுத்தியுள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு முதல் கைது செய்யப்பட்ட 2021 மார்ச் 10 வரை நியூ ஜெர்சியை சேர்ந்த பதின்மவயது சிறுவனாக நடித்து, அவர்களுடன் உரையாடி காணொலி வழியாக உரையாடி – மிரட்டி பாலியல் துன்புறுத்தல்களுக்கும் மனித குலத்துக்கு பொருந்தாத பாலியல் வழிகளை பின்பற்றவும் கட்டாயப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.
இந்தக் கொடூரங்களுக்காக ரமணன் பத்மநாதனுக்கு 396 மாதங்கள் சிறைத் தண்டனையும் அதன் பின்னர் அவர், 10 ஆண்டுகள் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம் அவரை பாலியல் குற்றவாளியாக அறிவிக்கவும கட்டளையிட்டுள்ளது.
முன்னதாக, 2022 ஒக்ரோபர் 27ஆம் திகதி கனடாவில் இதே குற்றங்களை செய்ததாக ஏற்றுக்கொண்ட ரமணன் பத்மநாதனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
