நள்ளிரவு முதல் முதல் நடைமுறைக்கு வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
92 ஒக்ரேன் பெற்றோல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்;றர் 434 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 95 ஒக்ரேன் பெற்றோல் 25 ரூபாய் அதிகரித்து ஒரு லீற்றரின் விலை 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஓட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரித்து ஒரு லீற்றர் 407 ரூபாயாகவும் சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரித்து ஒரு லீற்றர் 478 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
மண்ணெண்ணெயின் விலையும் லீற்றருக்கு 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சினோபெக், ஐ.ஓ.சி. நிறுவனங்களும் எரிபொருட்களின் விலைகளை இதேமாதிரியாக நிர்ணயித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
