அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் – சூட் போட வேண்டுமா? என தான் கோட் – சூட் அணிவது பற்றி முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில்,
நாம் கோட் – சூட் எல்லாம் போட்டுகொண்டு வருகிறோம் இல்லையா, அதைப்பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள்.
ஏன் நாமெல்லாம் கோட் – சூட் போடக் கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும் ஆதிக்க சக்திகளும் மட்டும்தான் கோட் – சூட் போடவேண்டுமா? நான் போடும் இரண்டே நிறம் நம்முடைய மனசு மாதிரி கறுப்பு – வெள்ளை.
எல்லாவற்றிலும் கறுப்பு – வெள்ளை போலவே நான் இருப்பேன் என்பதற்குத்தான் இந்த கலர். அந்த கறுப்பு நிறம், யாரைக் குறிக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
நீங்கள் தற்குறி தற்குறி என்று கூறியவர்கள்தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள்.
உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா?
பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப்போகிறோம். என்னை வெற்றிபெற வைத்ததைப்போல, இடைத்தேர்தலில் அவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
