சிங்கப்பூரும் பிரிட்டனும் அணுச்சக்திப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டில் கூட்டாகப் பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளன.
அதற்கான இணக்கக் குறிப்பில் தேசிய சுற்றுப்புற அமைப்பும் பிரிட்டனின் அணுச்சக்திக் கட்டுப்பாட்டு அமைப்பும் கையெழுத்திட்டன.
தகவல் பரிமாற்றம், நிபுணத்துவப் பரிமாற்றம், திறனாளர்களுக்குப் பயிற்சி போன்றவற்றில் இருதரப்பும் இணைந்து செயல்பட இணங்கின.
அணுச்சக்தியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அணுச்சக்தியைச் சிங்கப்பூரில் பாதுகாப்பாகச் செயல்படுத்தும் வழிகளையும் சிங்கப்பூர் ஆராய விரும்புகிறது.
அதற்கு இந்த இருதரப்பு ஒத்துழைப்பு உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
