செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினமும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வின் 14ஆம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், இங்கு அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
அடையாளம் காணப்பட்டவற்றில் 266 எலும்பக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டவற்றில் இரு எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை என்று கூறப்படுகிறது.
