பாகிஸ்தானில் கூரை சரிந்து விழுந்ததில் 6 சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஷாங்லா மாவட்டத்தின் கீழ் அல்பூரி பகுதியில் உள்ள ரஹீமாபாத் பகுதியில், நேற்று (01) வீட்டின் ஒரு அறையிலுள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் ஏழு குழந்தைகள் சிக்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி, சிக்கியிருந்த ஏழு குழந்தைகளையும் மீட்டனர். அதில் ஆறு குழந்தைகள் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles