சுரேஷ் சாலே மருத்துவமனையில்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே உடல்நலக் குறைவால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மற்றும் முறையற்ற நடத்தைகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டி, நேற்று இரவு முதல் அவர் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து வந்ததால் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்ததாக சட்டத்தரணிகளும் குடும்பத்தினரும் எச்சரித்திருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சாலே அண்மையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles