புலிகளின் பாடல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் பயங்கரவாத சட்டத்தின்கீழ் ஏன் கைது செய்யப்படவில்லை – இவ்வாறு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் நாமல் ராஜபக்ஷ.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை. அதே பாடலை பாடியதற்காக கிளிநொச்சி இளைஞன் தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு சார்பான வகையில் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது.
சுரேஷ் சாலே அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருக்காக விசேட பூஜைகள் செய்தோம். இதில் யாருக்கு என்ன பிரச்சனை உள்ளது – என்றும் அவர் கேட்டார்.
