துபாயில் லொறிமீது மினி பஸ் மோதி விபத்துக்கு உள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.
மினி பஸ் சாரதியின் கவனக்குறைவாலும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை பேணாததாலும் இந்த விபத்து நேர்ந்ததாக துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மினி பஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதால் ஏழு இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துபாயில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அத்துடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
