செம்மணி மனித புதைகுழியில் புதிய மனித எலும்புக்கூட்டு குவியல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட 23ஆவது மனித எலும்புக்கூட்டு குவியலாகும்.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 22ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இன்றைய தினத்தில் சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் உட்பட 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதேநேரம் 2 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
இன்றைய தினத்துடன் செம்மணி மனித புதைகுழியில் 341 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 327 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
