சிங்கப்பூரில் படகு மூழ்கியதில் மூவர் மரணம்!

சிங்கப்பூர் பாசிர் பாஞ்சாங் முனையத்தில் விநியோகப் படகு ஒன்று மூழ்கியதில் மூவர் உயிரிழந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை நீர்ப்படைக் கலம் ஒன்றின்மீது மோதிய அந்தப் படகு காலை 9.30 மணியளவில் மூழ்கியதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

ஆணையம், பொலிஸ் கடலோரக் காவற்படை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு ஆகியவை தேடல் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

மூழ்கிய படகில் இருந்த மூவரும் படகின் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களின் உடல் பாசிர் பாஞ்சாங் கப்பல்துறை மேடைக்கு அருகே நீரிலிருந்து மீட்கப்பட்டனர்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உதவி மருத்துவர்கள், மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

நீர்ப்படைக் கலத்தில் உள்ள ஊழியர்களுக்கு எந்தக் காயமும் இல்லை என்று ஆணையம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles