சிங்கப்பூர் – சீனா பாராளுமன்ற சபாநாயகர்கள் சந்திப்பு

சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருக்கும் சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகர் சியா கியான் பெங் (Seah Kian Peng), சீனத் தேசிய மக்களவைத் தலைவர் ஸாவ் லெஜியைச் (Zhao Leji) சந்தித்தார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றக் குழு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரும் சீனாவும் நாடாளுமன்றக் கலந்துரையாடல்கள் வழியாக மக்களுக்கு இடையில் உறவை வலுப்படுத்த முனைகின்றன.

நாடாளுமன்றங்களுக்கு நடுவே கருத்துப் பரிமாற்றங்களும் கலந்துரையாடல்களும் நடைபெறுவதன் முக்கியத்துவத்தை இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டது.

இருதரப்புக் கலந்துரையாடல்கள் உறவை வலுப்படுத்தும், இருதரப்புப் புரிந்துணர்வை வளர்க்க உதவும் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles