மலேசியா – ஜொகூர் மாநில சட்டசபை கலைப்பு!

மலேசியாவின் ஜொகூர் மாநில சட்ட சபை கலைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒன் ஹபீஸ் ஹாஸி அறிவித்துள்ளார்.

எனவே, அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. இது அந்த மாநிலம் எதிர்கொள்ளும் 16ஆவது தேர்தல் ஆகும்.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தானாகவே கலைக்கப்பட வேண்டியிருந்த நிலையில்இ மக்களுக்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒன் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

2022 தேர்தலில் 56 ஆசனங்களில் பாரிஸன் நஷனல் 40 இடங்களை வென்று ஆட்சியை அமைத்தது. பகாடன் ஹார்பன் 12 இடங்களையும் பெரிகாடன் நஷனல் 3 இடங்களையும் எம்.யூ.டி.ஏ. ஓரிடத்தையும் கைப்பற்றின.

இதனிடையே, அடுத்த தேர்தலில் பாரிஸான் நஷனல் தனித்து போட்டியிடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles