உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு

ஈரானின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 97.8 டொலராகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பந்தர் அப்பாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

எந்த நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்பது குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஈரானால் நடத்தப்பட்ட சில தாக்குதல்களை முறியடித்ததாக குவைத் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles