கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடாவில் வாழும் இந்தியர்கள் தண்ணீரில் மூழ்குவது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில், அது தொடர்பில், ரொறன்ரோவிலுள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், கனடாவில் வாழும் இந்தியர்கள் தண்ணீரில் மூழ்குவது தொடர்பில் கனடாவிலுள்ள இந்திய தூதரகத்துக்கு வரும் செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஆகவே, இந்தியர்கள், குறிப்பாக, இந்திய மாணவர்கள், ஏரிகள், ஆறுகள், கடற்கரைகள் அல்லது ஏதாவது நீர்நிலைகளுக்குச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை பின்பற்றுமாறும், தெரியாத, பாதுகாப்பற்ற நீர்நிலைகளுக்குள் இறங்குவதை தவிர்க்குமாறும், லைஃப் ஜக்கெட் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ள இடங்களில் அவற்றை பயன்படுத்துமாறும் இந்தியர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles