பிரிட்டனின் லங்காஷயர் கவுண்டியில் உள்ள பிரியர்ஃபீல்ட் பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று பிற்பகல் நடைபெற்றதாக லங்காஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காயமடைந்த சிறுமி அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய பிரியர்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை முயற்சி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
