ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜுலை 04 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
தெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் ஆகிய நகரங்களில் இறுதி ஊர்வலங்கள் நடைபெறும் என்று ஈரான் அரச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவரது மகன் முஜ்தபா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஈரான்மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய தாக்குதலில் உச்ச தலைவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
