கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்காஇ இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால், மத்திய கிழக்காசியாவில் போர் மூண்டது. இதன் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேசமயம், அமெரிக்கா – ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்தாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அத்துடன், ஒப்பந்தத்தை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக போக்குவரத்துக்காக திறக்கப்படும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தார்.
இதை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தானும் உறுதி செய்துள்ளது. அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் அது எப்போது என ஈரான் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையிலேயே, அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக ஈரானின் வடகிழக்கு நகரான மஸ்ஸாத் நகரில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் பணிமனையை ற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கறுப்பு, சிவப்பு கொடியுடன் போராட்டக்காரர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெண்களும் பங்கேற்றனர்.
போராட்டக்காரர்கள், வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி பதவி விலக வேண்டும்இ பாராளுமன்ற சபாநாயகர் காலிபாப் பதவி விலக வேண்டும்’ என முழக்கமிட்டனர். மேலும்இ அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் ஈரான் சில சமரசங்கள் மேற்கொண்டுள்ளன என்று போராட்டக்காரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டுமெனவும் அவர்கள் கூறினர்.
