அரசியலுக்கு வருகிறரா ராகவா லாரன்ஸ்?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தான் எடுத்துள்ள முக்கிய முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ராகவா லாரன்ஸ்,

‘நான் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன். அந்த முடிவை என் தாயார் முன்னிலையில் அறிவிப்பேன். எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்கும்போது மக்களின் கருத்தைக் கேட்பது எனது வழக்கம்.

என்னை அரசியலுக்கு வருமாறு இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர் என்று கூறிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைப் பாராட்டினார்.
பாடசாலைகளுக்கு அருகிலிருந்த மதுபான சாலைகள் மூடப்பட்டமை மற்றும் மதுக்கடைகள் குறித்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. எதிர்க்கட்சிகள் பொறாமையால் ஆட்சியை விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கு சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும். நான் எடுத்துள்ள முடிவை விரைவில் அறிவிப்பேன். அதன் பின்னர் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஆசீர்வாதம் பெறுவேன்’ என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ‘ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் இல்லாமல் எந்த முக்கிய முடிவையும் எடுக்கமாட்டேன். அரசியலுக்கு வந்தால் நடிப்பதற்காக அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வருவேன்.

ராகவா லாரன்ஸ் விரைவில் அறிவிக்கவுள்ள அந்த முக்கிய முடிவு அரசியல் பிரவேசம் தொடர்பானதா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles