ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 50 பேர் காயம்!

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக சுமார் 50 பேர் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குமாமோட்டோவில் உள்ள ஏயோன் மோலில் வெடிப்பு ஏற்பட்டதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலநடுக்கம் கியூஷு தீவின் உட்பகுதியில் மாலை 16:27 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் மையம் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழமற்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், 150,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட குறுகிய கால சுனாமி எச்சரிக்கை, ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆழமற்ற மையப்பகுதி என்பதால் மேலும் வலுவான பின்அதிர்வுகள் ஏற்படக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாங்கள் இன்னும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களின் முழு அளவை மதிப்பிட்டு வருகிறோம். எனினும், ஏற்கனவே பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளதென ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி ஊடகங்களுக்ககு கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜப்பான், ஆண்டுக்குச் சுமார் 1,500 நிலநடுக்கங்களைச் சந்திக்கும் உலகின் மிக முக்கியமான நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles