ராகுல் காந்தியை முந்தினார் விஜய்

எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் (1.47 கோடி) பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் 1.87 கோடி பின்தொடர்பவர்களுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களின்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களும் வீடியோக்களும் லட்சக்கணக்கில் வைரலாகின. இதன் மூலம் இளைஞர்களைச் சென்றடைய டிஜிட்டல் ஊடகங்களே மிகச் சிறந்த வழி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் வாயிலாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடியும் அறிவுறுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தைப் பொறுத்தவரை, 10.2 கோடி பின்தொடர்பவர்களுடன் (Followers) உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சர்கள் வரிசையில் அமித் ஷா (3.22 கோடி), நிதின் கட்கரி (66 லட்சம்) உள்ளிட்டோர் உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் (1.47 கோடி) பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் 1.87 கோடி பாலோயர்களுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து அசாதுதீன் ஒவைசி (1.25 கோடி), அரவிந்த் கேஜரிவால் (40 லட்சம்), பிரியங்கா காந்தி (40 லட்சம்) மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (23 லட்சம்) உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles