‘இதயம் முரளி’ படத்துக்காக தனுஷ் பாடிய வாம்மா பாடல்!

நடிகர் தனுஷ் இதயம் முரளி திரைப்படத்திற்காக பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

முன்னதாக, இசையமைப்பாளர் தமன் இசையமைப்பில் இதயம் முரளி திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் பாடிய, ‘வாம்மா… வாம்மா’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இதனை ஆதேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார். அதர்வாவுக்கும் நடிகை ப்ரீத்தி முகுந்தனுக்குமான பாடலாக இது உருவாகியுள்ளது. வரிகளும் தனுஷ் குரலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles