டில்லியைத் தாக்கிய புழுதிப்புயல்!

டில்லியின் அனைத்​துப் பகு​தி​களுக்​கும் இந்​திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்​டி) ‘ரெட் அலேர்ட்’ விடுத்​திருந்த நிலை​யில், அங்கு நேற்று கடுமை​யான புழு​திப்​புயல் வீசி​யது.

தலைநகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்​றும், மணிக்கு 60-80 கி.மீ வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும் என்​றும் கணிக்கப்பட்டுள்ளது. பாலம் மற்​றும் துவாரகா பகு​தி​களில் நேற்று பிற்​பகல் 2:30 மணி நில​வரப்​படி, மணிக்கு 92 கி.மீ. வேகம் வரை காற்று வீசி​யது.

முன்​ன​தாக, டில்லி​யின் பல இடங்​களில் இடி, மின்னலுடன்லேசான மழை பெய்​யக்​கூடும் என ‘ஒரேஞ் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டிருந்​தது. டெல்​லியை ஒட்​டி​யுள்ள ஃபதேஹா​பாத், ஜிந்த், சோனிபட், ரோஹ்தக் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் புழு​திப்​புயலைத் தொடர்ந்து லேசான மழை பெய்​யும் என வானிலை ஆய்வு மையம் கணித்​துள்​ளது.

நேற்று காலை​யிலும் டெல்​லி​யில் லேசான மழை பெய்​தது. இமயமலைப் பகு​தி​யில் ஏற்​பட்​டுள்ள திடீர் மேற்​கத்​திய இடையூறு காரண​மாக இந்த மழைப் பொழிவு ஏற்​பட்​டுள்​ளது. எனினும், இந்த அமைப்​பின் தாக்​கம் குறை​யத் தொடங்​கு​வ​தால், தலைநகரில் செவ்​வாய்க்​கிழமை முதல் படிப்​படி​யாக வெப்​பநிலை உயரும் என்று நிபுணர்​கள் கூறுகின்​றனர்.

தீவிர மேற்​கத்​திய இடையூறுகளின் விளை​வாக, வடமேற்கு இந்தியா​வில் ஜூன் 19 வரை மழை தொடரும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது. இந்த மழை கடுமை​யான வெப்ப அலையிலிருந்து மக்​களுக்கு நிம்​ம​தியை அளித்​துள்​ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles