ஆர்ஜென்ரீனா அபார வெற்றி – மெஸ்ஸி ஹற்றிக் கோல் அடித்து சாதனை!

2026 உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் குரூப் ‘ஜே லீக் ஆட்டத்தில், தற்போதைய சாம்பியனான ஆர்ஜென்ரீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடரை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரர் அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸி ஹற்றிக் கோல் அடித்து அசத்தலான சாதனையைப் படைத்துள்ளார்.

கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆர்ஜென்ரீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.

இதனைத் தொடர்ந்து, அல்ஜீரிய அணியினர் பதிலடி கொடுக்க முயன்றபோதிலும், ஆர்ஜென்ரீனாவின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் முழு வீச்சில் விளையாடிய மெஸ்ஸி, 60ஆவது மற்றும் 76ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து தனது ஹற்றிக் சாதனையைப் பதிவு செய்தார்.

முடிவில், ஆர்ஜென்ரீனா 3-0 என்ற கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கிண்ண வரலாற்றில் மெஸ்ஸியின் இந்த அதிரடி ஆட்டம் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles