இந்திய கிரிக்கெட் வீரர்களின் இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்தின் போது, 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோர் செல்ல பி.சி.சி.ஐ. சிறப்பு அனுமதியளித்துள்ளது.
கடந்த 1989ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்துள்ளது.
இந்திய ரி20 அணியில் தெரிசெய்யப்பட்டுள்ள சூர்யவன்ஷி தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் முத்தரப்பு தொடருக்காக இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர உள்ளதால், அவரது மன உறுதியை அதிகரிக்கவும், தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கவும் அவரது பெற்றோர் அருகில் இருப்பது அவருக்கு மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும் என்று பி.சி.சி.ஐ கருதுகின்றது என பி.சி.சி செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
