அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பேச்சுவார்த்தை நாளை (21) சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன.
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றத்தைத் தணிக்க இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது பாகிஸ்தானின் முன்னெடுப்பில் மீண்டும் தொடங்கவுள்ள இந்த பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளுக்காக, ஜே.டி. வான்ஸ் அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு லெபனானில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தவாறே, இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு நெதன்யாகுவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸஸூம் உத்தரவிட்ட உடனேயே இது நிகழ்ந்துள்ளது.
