சீனத் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங்-ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் யான்வெய் சு மற்றும் சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் மெய் ஜிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவு விழா குறித்து சீனத் தூதுவர், ஜே.வி.பி பொதுச் செயலாளருக்கு விளக்கமளித்ததுடன், ஆண்டுவிழாவை முன்னிட்டு கொழும்பில் நடத்தப்படவுள்ள உத்தியோகபூர்வ விழாவில் கலந்துகொள்ளுமாறு ரில்வின் சில்வாவுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், சீனாவில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ள கல்வித் திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பு வேளையில் கலந்துரையாடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles